Pages

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்!! பரிசுத்த வேதாகமம் அருளப்பட்டதல்ல! பரிசுத்த மனிதர்கள் தேவனுடைய செய்தியை பெற்று எழுதினார்கள்!!

Wednesday, February 27, 2013

கத்தரி தோட்டத்து வெருளிகள்


மனித சமுதாயம் உருவான காலம் தொடக்கம் இன்றுவரை மனிதர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, விளையாட்டு பொம்மைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம் பார்பி பொம்மைகளை உருவாக்க அவை அரைகுறை ஆடைகளுடன் இருப்பதாக கூறி, ஈரானியர்கள் முக்காடிட்ட பொம்மைகளை உருவாக்குகின்றனர்.

கி.மு 2456ல் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் இறைவனால் காப்பாற்றப்பட்ட நோவாவின் பூட்டனான நிம்ரோத், 'கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்' என்று வேதாகமம் கூறுகின்றது (ஆதி 10:9). இவன் சிநேயார் தேசத்திலுள்ள பாபிலோன், ஏரேக், அக்தாத், கல்னே ஆகிய இடங்களை ஆட்சிபுரிந்தவன். இவன் ஒருநாள் திடீரென மரணமடையவே, அவனது மனைவியான செராமிஸ்..... அரசனாகிய நிம்ரோத் மீண்டும் பிறப்பான் என விளம்பரப்படுத்தி, ஒரு தேவ தாய் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்ற பொம்மைகளை உருவாக்கி, பூமியெங்கும் மனிதர் குடியிருந்த பகுதிகளெங்கும் அச்சிலைகளை அனுப்பிவைத்தாள். பாபிலோனிலிருந்து மனித நாகரீகம் மட்டுமல்ல! இப்பொம்மை வணக்கமும் கூடவே பூமியெங்கும் பரவியது!

ஈராக்கில் பிறந்த ஆபிரகாம் இப்பொம்மை வணக்கத்தில் கலந்து கொள்ளாதவனாக இருந்ததால், ஏக இறைவன் அவனது சந்ததியில், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பிறக்கவைப்பதற்காக, அவனை மத்திய தரைக் கடலோரமாக போய் குடியேறும்படி கட்டளையிட்டார். பூவுலகின் நடுமையமாக கருதப்படும் எருசலேம் மாநகரில் சாத்தானின் கபாலமாகிய பிசாசின் தலையை வெற்றிகரமாக நசித்து, அவனது போலிவேடத்தை அழிப்பது தேவனுடைய உன்னதத்திட்டமாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி சர்வலோக பெரும் யாகமாகிய பாவநிவாரண பூசைப்பலியை நிறைவேற்றினார். அந்த யாகத்தில் சிந்தப்பட்ட தேவகுமாரன், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற் கூடாகவே, மனித குலத்தினரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதும், மன்னிக்கப்பட்ட மனிதர்கள் படிப்படியாக தூய்மையடைந்து புனிதர்களாகின்றனர் என்றும் அவர்கள் தேவலோக பிரஜைகள் ஆகின்றனர் என்றும் வேதாகமம் கூறுகின்றது.

பஞ்சத்தின் நிமித்தம் எகிப்தில் குடியேறிய ஆபிரகாமின் சந்ததியினர், 430 வருடங்களின் பின் அங்கிருந்து மோசேக்கூடாக... செங்கடலைக் கடந்து சீனாய் மலையோரமாக வரும்போது.... அக்கொடுமுடியில் தோன்றிய தேவன், நீங்கள் 'என்னையன்றி வேறு தெய்வங்களை வணங்கக் கூடாது' என்றும், பொம்மை வணக்கமாகிய'சிலைகளை உருவாக்கக் கூடாது' என்றும், அடுத்த வீட்டுக்காரன் மனைவிமேல் மோகங்கொள்ளக்கூடாது என்றும்... இவ்வண்ணமாக மொத்தம் பத்து அதிவிசேஷ கட்டளைகளை தமது விரல்களால் எழுதிக்கொடுத்துள்ளார் (யாத். 20:1-17).

மாமன்னன் சாலமோன், தேவாதி தேவனுக்கு ஜெருசலேமில் மாபெரும் தேவாலயத்தைக் கட்டிய போதிலும் யூதர்கள், அயல் நாட்டினரின் பொம்மைகளையே வணங்க ஆரம்பித்தனர். இறைவன் தமது தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவ்வணக்கம் படுபிழைகள் என எச்சரித்தபோதும் எருசலேமில் வாழ்ந்தவர்கள் திருந்தவேயில்லை! எனவே இறைவன், நாமறிந்த எமது இன்றைய தலைவரைப்போன்ற தோற்றமுடைய பாபிலோனிய பேரரசனான நேபுகாத்நேச்சரைக் கொண்டே, யூத தேசத்தை அழித்தொழிக்க முடிவெடுத்தார்.

கி.மு 606ல் பாபிலோனிய இராணுவம் ஜெருசலேமிற்குள் நுழைந்து யோயாக்கீம் என்ற யூத அரசனைப் பிடித்து, அவனைக் கொலை செய்து, அவனுடலை பனியிலும் சூரிய உஷ்ணத் திலும் வாட்டியெடுத்து இறுதியில் ஒரு செத்த கழுதையை புதைப்பதுபோல் புதைக்க கட்டளையிட்டார். (எரேமியா 36:30)   பின்பு 11 வருட வித்தியாசத்தில் இறுதி யூத அரசனான சிதேக்கியாவைப் பிடித்து, அவனது கண்களுக்கு முன்பதாகவே அவனது பிள்ளைகளை கொலைசெய்து, அவனது இரு கண்களையும் குருடாக்கி, அவனை பாபிலோனுக்கு இழுத்துச் செல்லவும் அவர் அனுமதித்தார். (எரேமியா 52:10-12). இவ்வண்ணம் யூத அரசியல்,  தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவைப்போல் பெரும் பேரழிவாக முடிந்ததற்கு, தேவாதி தேவன் எக்காலமும் அருவருக்கும் இப் பொம்மை வணக்கங்களே மூலகாரணங்களாக அமைந்தன.

விக்கிரக பொம்மை வணக்கங்கள் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதை பரிசுத்த வேதாகமமும், 2009 மே மாதம்வரை இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இன்று மனிதர் மெய்யான தெய்வம் எது? மனிதர்களால் அழகுபடுத்தப்பட்ட பொம்மைகள் எது? என்பதை பிரித்து அறியமுடியாமல் பட்டுடுத்தி, மின்னும் பொன் ஆபரணங்களால் தங்களை அலங்கரித்து, ஊர்வலமாக வலம்வந்து, கோவில்களில்  இப்பொம்மைகளைத் தரிசித்து, அவற்றிடமிருந்து மாபெரும் ஆசிகளை பெற்றுக்கொள்வதாக இம்மக்கள் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அவ்வெண்ணங்கள் யாவும் உண்மையானவைகள் அல்ல!

தீர்க்கதரிசியான எரேமியா, யூத தேச மக்களுக்கும் யூத அரசர்களுக்கும் உவமித்துக் கூறிய (תמר) தோமேர் என்ற எபிரேய சொல்லை.... ரோமன்கத்தோலிக்க திண்டிவன மொழிபெயர்ப்பில் 'வெள்ளரித்தோட்டத்தில் பறவையோட்டவைக்கும் பூச்சாண்டி பொம்மைகள்' என்றும், வேறு ஒரு பிரதியில் 'சோளக்கொல்லை பொம்மை' என்றும் திருவிவிலியத்தில் 'வெள்ளரித்தோட்ட பொம்மை' என்றும் மிகச்சரியாக மொழி பெயர்த்துள்ளனர். (எரேமியா 10:5) இன்று பல கிறிஸ்தவ வீடுகளில் கூட வைக்கோல் அடைக்கப்பட்ட, இக் கரிப்பானை தலையுடைய 'கத்தரி தோட்டத்து வெருளிகள்' அழகிய சிலைகளாகவும் கண்ணாடி பிரேம்களுக் குள் அச்சடிக்கப்பட்ட வர்ணப் படங்களாகவும் காணப்படவில்லையா? யூதருக்கொரு சட்டம்! நமக்கொரு சட்டமா? இப் பூச்சாண்டி வணக்கத்தை, இறைவன் பெரும் பாவமாக கணித்து, அவ் வணக்கத்தினரை தண்டிப்பது மாத்திரமல்ல, அவர்களுடைய பிள்ளைகளையும் அவர்களுடைய பேரப்பிள்ளைகளையும், அவர்களது பூட்டப்பிள்ளைகளையும் தண்டிப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.

'உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்' என்று இவ்வுலகத்தை சிருஷ்டித்த இறைவனாகிய ஜெகோவா எச்சரித்துள்ளார். இன்று சத்திய மார்க்கமாக கிறிஸ்தவம் மட்டுமே துலங்கிக் கொண்டிருக்கின்றது. 'தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிவதே சதாகால வாழ்வு' என்று யோவான் 17:3 கூறுவதால் நீங்கள் விரைவாக அவரைக்குறித்து அறிய தீர்மானிக்கவேண்டும். 

அடுத்தவருடம் நீங்கள் இப்பூமியில் வாழமுடியாமல், உங்கள் வாழ்க்கை இவ்வருடத்துடனேயே  முடிவடையலாம். எனவே இவ்வருடத்தையே இரட்சகரான இயேசுகிறிஸ்துவை அறியும் நல்ல வருடமாக நீங்கள்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்! பூச்சாண்டிகளை நீங்கள் வணங்குவீர்களானால் அதற்கு சரியான தண்டனை  உங்களருகே நிற்கும் ஆயுததாரியின் அல்லது கிறிஸ்மனிதனின்  இடுப்பில் செருகப்பட்டிருக்கும் கூரான ஆயுதமாகும் என்பதை கீழ்கண்ட வசனம் உறுதி செய்கின்றது.

'தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங் கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார். அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம் பண்ணினார். தம்முடைய அம்புகளை (அதாவது இடியோடு கூடிய மின்னலை) அக்கினி அம்புகளாக்கினார்'  (சங்.7:11-22). 

எனவே ஒருநாள் அவன் உன்னைப் பிடித்து ஏதோ ஒரு காரணத்தை சொல்லி...., 'நீ ஒரு படுபிழையான நபர்' என்று உனக்கு ஒரு மகுடமிட்டு, உன்னை நியாயந்தீர்த்து, உன்னைக் கொன்று போடுவதற்கு  முன்பதாகவே.... நீ உனது குற்றங்களிலிருந்து விடுபட, இன்றே கிறிஸ்து இயேசுவை நெருங்கி, அவர் தரும் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வாயாக!

நன்றி!